தமிழ் வரலாறு பாடப் புத்தகத்தில் குடும்ப உறவு முறைகளில் குளறுபடி!

மன்னிப்புக் கோரியது கல்வி அமைச்சு

கோலாலம்பூர் –

இவ்வாண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நான்காம் ஆண்டு வரலாற்றுப் பாட நூலில் உறவுப் பெயர்களை மொழிபெயர்ப்பதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு மலேசியக் கல்வி அமைச்சு அந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

கல்வி அமைச்சால் அச்சிடப்பட்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பாட நூலில் இடம்பெற்றுள்ள குடும்ப உறவு முறைகள் மலாய் மொழியில் அப்படியே தரப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதன் தொடர்பான செய்தியை மக்கள் ஓசை வெளியிட்டிருந்தது.
இந்தப் பாட நூலை டேவான் பகாசா டான் புஸ்தகா 2019இல் அச்சிட்டு வெளியாக்கியது. கல்வி அமைச்சு அந்தப் பாடப் புத்தகத்தின் 21ஆவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள அந்தத் தகவலை ஆய்வு செய்தது.

குடும்ப உறுப்பினர்களின் பெயரைத் தமிழில் குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக மலாய் மொழியின் நேரடி உச்சரிப்பாக தமிழில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது.
இது ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்பதை ஒப்புக்கொண்ட கல்வி அமைச்சு இவ்விவகாரம் தொடர்பில் ஒரு விளக்கக் கடிதத்தை அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாநில கல்வி இலாகா வழி அனுப்பி வைக்கும்.

அதே சமயத்தில் இந்த 4ஆம் ஆண்டு வரலாற்றுப் பாட நூலில் 21ஆவது பக்கத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாடத்தை சரி செய்து மீண்டும் அச்சிட்டுத் தருமாறு டேவான் பகாசா டான் புஸ்தகாவை கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here