போபால் –
தலைக்கவசம் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மத்தியபிரதேச மாநிலத்தில் நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் சாலை விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி போக்குவரத்து காவலர்கள் சார்பில் நடத்தப்பட்டது.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போக்குவரத்து காவலர்கள் விநியோகம் செய்து வந்தனர்.
இந்நிலையில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வருபவர்களை, போக்குவரத்து காவலர்கள் நிறுத்தி அவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி வருகின்றனர். தலைக்கவசம் அணியாமல் பிடிபட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் ஏன் தலைக்கவசம் அணியவில்லை? என்ற காரணத்தை சுருக்கமாக 100 வார்த்தைகளில் கட்டுரையாக எழுதித் தருமாறு அவர்களுக்கு நூதன தண்டனையை காவலர்கள் வழங்கி வருகின்றனர்.
மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.