பத்துகாஜா –
இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் ஃபைசால் டத்தோ அஸுமு கேட்டுக் கொண்டார்.
பத்துகாஜாவில் நேற்று புந்தோங் வட்டார 124 இந்தியக் குடும்பங்களுக்கு நிலப்பட்டாவுக்கான பாரம் 5ஏ வழங்கிய நிகழ்ச்சியின்போது அவர் மக்கள் ஓசையிடம் இந்தத் தகவலைக் கூறினார்.
இந்த நிகழ்வின்போது தம்மைச் சந்தித்த மக்கள் ஓசை இயக்குநர் கோபாலகிருஷ்ணனுடன் உரையாடிய மந்திரி பெசார் இந்தக் கருத்தை வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்தினர் கல்வியில் பின்தங்கி விடாமல் இருக்க ஊடகங்களும் தங்கள் பங்கினைச் சிறந்த முறையில் ஆற்றிட வேண்டும்.
இந்திய சமூகத்தின் கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிடும்படியும் மந்திரி பெசார் கேட்டுக் கொண்டார். அதே சமயம் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மக்கள் பிரதிநிதிகளின் சேவைகள் பற்றிய செய்திகளையும் சிறந்த முறையில் வெளியிடும்படியும் அவர் விருப்பம் தெரிவித்தார்.