பிரச்சினைகளை தீர்க்கும் நவரத்தினங்கள்

ஆபத்துக் காலங்களிலும் அனைத்து சமயங்களிலும் உதவுவது மணி மந்திர ஒளஷதமே என்று மேலோர் குறிப்பிடுவர். மணி என்பதில் சோதிடம், வைத்தியம், வாஸ்து, எண் கணிதம், பக்தி எனப்படும் இறையருள் பெறும் துதி செய்தல் உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் இணைகின்றன. மினரல் எனப்படும் தாது பொருள்களை கணக்கி அடங்காத அளவில் பூமித்தாய் தந்திருக்கிறாள். அவற்றில் 300 அரிய தாதுக்களை அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்; அவற்றின் அரிய பயன்களைச் சொல்லி வருகின்றனர்.

இந்த முன்னூறில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்டவற்றை அரிதான மணிகள் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த எண்பதில் ஒன்பது மணிகளை உலகில் உள்ள அனைத்து பழைய நாகரிகங்களும் – உச்சி மேல் வைத்துக் கொண்டாடுகின்றன. ஒன்பது மணிகளை நவரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.

அவையாவன :

1. மாணிக்கம் 2. முத்து – 3.பவளம் 4.மரகதம் -5. புஷ்பராகம் – 6.வைரம் -7.நீலக்கல் 8.கோமேதகம் -9.வைடூரியம் – கருட புராணம், சரக சம்ஹிதை, ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நூல்கள் ஒவ்வொரு ரத்தினத்தின் பயனையும் தன்மையையும் விரிவாக விளக்குகின்றன.இவை பிரமிப்பை ஊட்டுபவை; ஏனெனில் இன்று அறிவியல் பல நவீன சாதனங்களின் உதவியால் கூறுபவற்றை அவை தீர்க்கமாக துல்லியமாகப் பல்லாண்டுகளுக்கு முன்பேயே குறிப்பிட்டிருப்பதால் தான் இந்த பிரமிப்பு.

இந்த அடிப்படையில் நவ ரத்தினங்களை அலசுவோம்:

மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது. குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை உடனே குணப்படுத்தும். முத்து மன சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும். வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.

மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும். துர்தேவதைகளை விலகச் செய்யும். புஷ்பராகம் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும். வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில் உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.

நீலக்கல், ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இரு வகைப்படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.

கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வைடூரியம் வாழ்வில் ஏற்படும் பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது. இப்படிப்பட்ட ரத்தினங்களை ஜோதிட சாஸ்திரம் ஆதரிக்கிறது; அணிந்து பயன் பெறுமாறு அறிவுறுத்துகிறது. கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here