ஆப்கான் விமானம் விழுந்தது: 80க்கும் மேற்பட்டோர் பலி

காபூல் –

ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்குச் சொந்தமான அரியானா ஏர்லைன்ஸ் விமானம் தலிபான் தீவிரவாதிகளுக்குச் சொந்தமான காஸ்னி பிரதேசத்தில் விழுந்தது.
விமானத்தில் பயணம் செய்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டு செய்தி நிறுவனம் வெளியிட்ட முதல் கட்ட செய்திகள் கூறுகின்றன.

திங்கட்கிழமை பிற்பகல் 1.10 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியிருப்பதாக காஸ்னி பிரதேசத்தின் கவர்னர் அரிப் நூரி தகவலளித்துள்ளார்.

போயிங் ரக விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் முழு எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை. 80க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி மரணமடைந்திருக்கலாம். விமானம் விழுந்து நொறுங்கியதற்கு தலிபான் தாக்குதல் காரணமா என்பது தெரியாது என அரிப் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here