ரஜினி ஏன் மறுக்கவில்லை?

நெல்லை –

முரசொலி, துக்ளக்கை ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை என நடிகர் ரஜினி இதுவரை ஏன் மறுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார் தி.மு.க. வர்த்தகர் அணி செயலர் காசிமுத்துமாணிக்கம்.

திருநெல்வேலி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் சிவபத்மநாபன் தலைமையில் தனுஷ்குமார் எம்.பி. முன்னிலையில் தி.மு.க. பொதுக்கூட்டம் தென்காசியில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய காசி முத்துமாணிக்கம், துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினியை ஆதரித்துப் பேசிய பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் ணனை விமர்சித்தார்

பொன்னார் வக்காலத்து வாங்கி பேசுகிறார். கப்பலை மாலுமியும் கேப்டனும் மாறி மாறி மூன்று மாதங்கள் ஓட்டி கரை சேர வேண்டும்.

கப்பலை மாலுமி ஓட்டும்போது கப்பலின் தலைவர் டைரி எழுதுவார்; கேப்டன் ஓட்டும்போது மாலுமி டைரி எழுதுவார். இது மாறி மாறி நிகழும். ஒரு நாள் மாலுமி குடிபோதையில் கப்பல் ஓட்டியது கேப்டனுக்குப் பிடிக்கவில்லை. கேப்டன் டைரியில் மாலுமி இன்று குடித்து விட்டு கப்பலை ஓட்டினார் என எழுதினார்.

அடுத்த நாள் கேப்டன் கப்பல் ஓட்டினார். மாலுமி இன்று கேப்டன் குடிக்காமல் கப்பல் ஓட்டினார் என டைரியில் எழுதினார். மாலுமி உண்மையை எழுதினாலும் இன்று கேப்டன் குடிக்காமல் ஓட்டினார் என்றால் இதற்கு முன் கேப்டன் குடித்துவிட்டு ஓட்டியதுபோல் பொருள் வருகிறது அல்லவா?

எனவே முரசொலி, துக்ளக்கை ஒப்பிட்டு பேசிய விவகாரம் தொடர்பாக நான் அந்த அர்த் தத்தில் சொல்லவில்லை என ரஜினி ஏன் இதுவரை மறுக்கவில்லை? என காசிமுத்து மாணிக்கம் கூட்டத்தில் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here