கந்தனுக்கு கந்த விரதமாகிய கந்தஷஷ்டி விரதமனுஷ்டிப்போர்; பெறும் பேற்றை “ஏழையர்,வதுவை வேண்டினேற்ற கன்னி யரைச் சேர்வர் வாழு” நன் மகவு வேண்டின் மக்களைப்பெறுவரென்றும், பாழிவாய் மணிச்செஞ் சூட்டுப் பறலை யனந்தன் றாங்கு மாழி சூழுலகமெல்லாம் வேண்டினு மடைவர் மாதோ”
பலன் விழையாது நோக்கிற் பாவம் தொழிந்து சிந்தை நலமுற முமுட்சு வாகிக் குருவினால்ஞானம் பெற்றுப் புலன்வழிச் செலவு நீக்கிப் போதபூ ரணவானந்த வலைகடல் வடிவாங் கந்தனடியிணை நீழல் சேர்வார் (இதன்பொருள்:- யாதொரு பலனையும் விரும்பாது விரதம் அனுட்டிப்போர் பாவம் நீங்கி சித்தசுத்தியுடையவர்களாய் இயல்பாய் முத்தி விருப்பம் எழப்பெற்று, பின்ஞான சற்குருவையடைந்து, ஐம்புலப் பகைவராதியோரை வென்று, பூரண ஞானானந்தசொருபராகும் முருகப் பெருமானின் திருவடி நிழலில் பிறப்பிறப்பு நீங்கிப் பேரானந்தப் பெருவாழ்வு பெறுவர் என்பதாம்).
எனவே நாமும் இவ்விரதத்தினை நோற்றுக் கலியுகவரதனும், கண்கண்ட தெய்வமுமாகிய கந்தசுவாமியாரின் திருவருளினால் பூரணமான ஆனந்த வாழ்வுபெற முயலுவோமாக.