மணிலா –
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மலேசியா – இந்திய அணி அபார வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளன.
ஆண்கள் பி-பிரிவில் மலேசியா, இந்தியா, கஜகஸ்தான் இடம் பெற்றுள்ளன. நேற்று காலையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்திய வீரர் நட்சத்திர வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி தலைமையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி கிட்டியுள்ளது. பின்னர் மாலையில் நடந்த 2ஆவது ஆட்டத்தில் மலேசியா 5-0 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தானை வென்றது. இதில் மலேசியாவுக்கு முதல் புள்ளியை மணிலா சீ கேம்ஸில் தங்கம் வென்ற லீ சின் ஜியா பெற்றுத் தந்தார்.
இன்று பலம் வாய்ந்த மலேசியாவுடன் இந்தியா மோதுகிறது. இப்போட்டியில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.