நினைத்ததை சாதிக்க

நினைத்ததை சாதிக்கணும். இந்த எண்ணம் உங்களிடம் உள்ளதா? 10 நிமிட உப்பு தியானம் போதும்.  நம் மனதை ஒருநிலைபடுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பழக்கம் தான் தியானம். ஆனால் தியானத்தை ஒரு வித்தியாசமான முறையில் செய்வதன் மூலம் நாம் மனதில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இந்த தியானத்தை நாம் உப்பைப் பயன்படுத்தி தான் செய்யப் போகின்றோம். தியானத்திற்கு பயன்படுத்தப்படும் உப்பானது கண்டிப்பாக கல் உப்பாக இருக்க வேண்டும். உங்களின் மனதில் நினைத்திருக்கும் அந்தக் குறிக்கோள் நிறைவேற இந்த உப்பு தியானத்தை தொடர்ந்து தினம்தோறும் செய்து வரலாம். எப்படி உப்பு தியானம் செய்வது? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
முதலில் இந்த பரிகாரத்தை செய்வதற்கு பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிக்க வேண்டும். காலை வேளையில் குளித்த பின்புதான் தியானத்தை மேற்கொள்ள வேண்டும். குளித்தபின்பு கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் ஆசனம் போட்டு அமரலாம். இல்லாவிடில் சம்மணம் இட்டு அமர்ந்து கொள்ளலாம். உங்களது இரண்டு உள்ளங்கைகளிலும் ஒரு பிடி அளவு கல் உப்பை எடுத்துக் கொள்ளவும். உங்களது மடியில் வெள்ளை நிற காகிதம் ஒன்றையும் வைக்கவும். கண்களை மூடிக்கொள்ளவும்.  உப்பு நிரப்பப்பட்ட உங்களின் இரண்டு கைகளையும், இரண்டு தொடை பகுதியில் வைத்து, உள்ளங்கைகளை திறந்தவாறு வைத்துக் கொள்ளுங்கள்.
மூச்சை நன்றாக உள்வாங்கி விடவேண்டும். இப்படி ஒரு 11முறை மூச்சு பயிற்சி செய்த பின்பு இரண்டு உள்ளங்கைகளையும் உப்பை சேர்த்து இறுக்கி மூடிக் கொள்ளவும். இதன் பின்பு, தியானத்தில் அமர்ந்த நிலையிலேயே, கண்களை மூடிக்கொண்டு உங்களது கோரிக்கைகளை நீங்கள் மனதார சொல்லிக் கொள்ளலாம் அல்லது வாய்விட்டு சொல்லலாம். உங்கள் மனதில் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ‘நான் படிப்பில் நன்றாக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்’ என்றவாறு ஒரு 15 நிமிடங்கள் கண்களை மூடி சொல்லிக்கொண்டே இருங்கள். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்றால் நன்றாக உழைக்க வேண்டும். நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
இதனால் ‘நன்றாக உழைக்கும் சக்தியை எனக்கு தர வேண்டும்’ என்று அந்த இறைவனிடம் வேண்டுங்கள். இப்படி நீங்கள் வேண்டிக்கொள்ளும் வேண்டுதல்களானது நேர்மறையாகவும் உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளாகவும் இருக்க வேண்டும். இது தவிர்த்து ‘நிறைய பணம் வேண்டும்’ ‘தேர்வில் படிக்காமலேயே மதிப்பெண் எடுத்து விடவேண்டும்’ இப்படியெல்லாம் வேண்டி கொள்ளக் கூடாது.  இந்த தியானத்தை பதினைந்து நிமிடம் தொடர்ந்து செய்துவிட்டு உங்களில் உள்ளங்கைகளிலும் இருக்கும் உப்பை உங்கள் மடியில் இருக்கும் வெள்ளை பேப்பரில் கொட்டி விடுங்கள்.
இந்த தியானமானது காலை 5.30 மணிக்கு உள்ளாகவே முடிந்துவிட வேண்டும். விடிந்தவுடன் அந்த உப்பை நீர்நிலைகளில் சென்று கரைத்து விடலாம். நீர்நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள், உங்களது வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி இந்த உப்பைக் கொட்டி கரைத்துவிட்டு சமையலறை சிங்க் தொட்டியில் ஊற்றி விடலாம். தினம்தோறும் இப்படி இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஒரே காரியத்திற்காக தியானம் செய்யப்படவேண்டும். உங்களது கோரிக்கை நிறைவேறும் வரை, வேண்டுதலை மாற்ற கூடாது. நம்பிக்கையோடு இந்த தியானத்தை செய்து வந்தால் இதற்கான பலனை நிச்சயம் உங்களால் உணர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here