மாட்ரிட் –
ஸ்பெயினின் கேனரி தீவை புழுதிப் புயல் மோசமாகத் தாக்கி வருகிறது. இதனால் விமானப் பயணங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சஹாரா பாலைவனத்திலிருந்து வீசிய புழுதிப் புயலால் கேனரி தீவு முற்றாக இருளில் மூழ்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணிக்கு நூற்று இருபது கிலோமீட்டர் வேகத்தில் கேனரி தீவை புழுதிப் புயல் தாக்கியது. இதனால் பல விமான நிலையங்களின் பயணச் சேவை பாதிக்கப்பட்டது.
கேனரி தீவிலிருந்து சுமார் ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில் கேனரி தீவு உள்ளது. அங்கிருந்து புறப்பட்ட புழுதிப் புயல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து கேனரி தீவை தாக்கியது.
புயல் மிகக் கடுமையாக இருந்ததால் அத்தீவில் பல சுற்றுப்பயணிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். விமானப் பயணங்கள் இன்னும் தொடங்கப்படாததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் அவர்கள் தவிர்த்து வருகின்றனர். எண்ணூற்றுக்கும் மேற்பட்ட பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.