கோலசிலாங்கூர் –
அண்மையில் தமிழகம் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் கோலசிலாங்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த கராத்தே ஸ்பீட் பவர் குழுவினர் ஏராளமான பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மாஸ்டர் கதிரவன் தலைமையில் 10 போட்டியாளர்கள், 2 அதிகாரிகள், 2 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவை பெஸ்தாரி ஜெயா ஸ்ரீ மகா காளியம்மன் பொற்கோயில் நிறுவனர் டத்தோஸ்ரீ சுவாமி பெரியண்ணன் வாழ்த்தி தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார்.
இந்தக் குழுவினர் கத்தா, குமிட்டே, வெட்ரன் பிரிவுகளில் பங்கு கொண்டனர். சென்னை யில் இக்குழுவினர் குமித்தே பிரிவில் மூன்று தங்கப்பதங்களையும் மூன்று வெள்ளிப்பதக்கங்களையும் வென்றனர்.
கத்தா பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, எட்டு வெங்கலத்தை வென்றனர். கோயம்புத்தூரில் நடைபெற்ற போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலத்தை வென்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்கினால் அவர்களாலும் பிரகாசிக்க முடியும் என்று கூறிய முதன்மை பயிற்சியாளர் மாஸ்டர் கதிரவன், சிவசக்தி பெரியண்ணன், தமிழாழினி பூபாலன், தமிழினி பூபாலன், தேவேஷ்வர் சிவசங்கர், சசிவர்மன் தங்கவேலு ஆகிய மாணவர்களின் வெற்றியைக் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.