காதுகுத்தும் கனரக ஓட்டுநர்களும் கண்டுகொள்ளாத போக்குவரத்து அதிகாரிகளும்

கனரக ஓட்டுநர்கள்
மார்ச் 10-
         சாலைக்கட்டணம் வசுலிக்கும் பகுதிகளில் ஒதுக்குப்புறமாக இருக்கும் மோட்டார் சைக்கிளோட்டிகளின் தடத்திற்கு இடையூறு ஏற்படும் வண்ணம் பல கனரக ஓட்டுநர்கள் நடந்துகொள்கின்றனர் என்பதே பரவலான புகாராக இருக்கிறது.
கூடுதலாக பாரத்தைக் கொண்டிருக்கும் கனரக வாகனங்கள் சாலைக்கட்டணச் சாவடியைத் தாண்டியதும் மோட்டார் சைக்கிள் ஓடுபாதையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். இப்படிப்பட்ட சமபவங்கள் சுங்கைபூலோ சாலைக்கட்டணச் சாவடியைத் தாண்டியதும் காலை நேரங்களில் காணமுடிகிறது.
அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் கட்டணம் நிரப்பும் இயந்திரப்பகுதியும் ஓய்வு எடுக்கும்  பகுதியும் இருக்கிறது. கனரக வாகனங்கள் நிறுத்துமிடமும் அங்குதான் இருக்கிறது. அதே இடத்தில் சாலை போக்கு வரத்துத்துறை அதிகாரிகளும் சோதனையில் இருப்பார்கள்.
  சாலைக் கட்டணச் சாவடியைக்கடந்து, துணிச்சலாக வரும் கனரக வாகனங்களைத் துருவித் துருவி சோதிப்பார்கள். மோட்டார் சைக்கிள் தடத்தை மறித்துக்கொண்டிருக்கும் வாகனங்களின் ஓட்டுநர்கள் எவ்வித கவலையும் இன்றி உறக்கமும் போட்டுவிடுவார்கள்.
இவர்களுக்கு சாலை போக்குவரத்து அதிகாரிகளின் நடவடிக்ககள் குறித்த தகவலும் வந்துகொண்டே இருக்கும். மொத்தத்தில் இது கண்ணாம்பூச்சி நாடகமாகவே  அன்றாடம்  அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பூனைக்கு மணி கட்டுவது எப்படி என்றுதான் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் புலம்புகிறார்கள்.
                                                                                                                          இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here