‘சீரிம்’ முத்திரை நிறுவனத்திலும் ஒருவருக்கு கொரோனா

'சீரிம்' முத்திரை நிறுவனத்திலும் ஒருவருக்கு கொரோனா

ஷாஆலம், மார்ச் 11-
உள்நாட்டு உற்பத்திப் பொருட்களுக்கு தரச்சான்றிதழ் வழங்கு வரும் அரசாங்கத்தின் ‘சீரிம்’ முத்திரை நிறுவனத்திலும் ஒரு பணியாளருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டபிறகு அவர் உடடினயாக சுங்கை பூலோ மருத்துவனையின் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் ‘சீரிம்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளது.

மலேசிய நிதியமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் ‘சீரிம்’ தற்போது தனது பணியிடத்தை சுகாதாரப் பாதுகாப்பு தூண்டலுக்கு உற்படுத்தி வருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் கோலலம்பூர் ராஜா லாவுட் சாலையில் உள்ள இபிஎப் அலுவலகம், புத்ரா ஜெயாவில் உள்ள தகவல் பல்லூடக ஆணையம் ஆகியவற்றிலும் கொரோனா நோய்த்தாக்கம் உள்ள பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here