அழகிய கைவண்ணம் அதிலே பல எண்ணம்

அழகிய கைவண்ணம் அதிலே பல எண்ணம்

புடு, மார்ச் 12-

சுவர் ஓவியங்கள் என்பது அற்புதமான கலை. இதற்கு உயிர் கொடுப்பவர்களாக மலேசியர்கள் இருக்கிறார்கள் என்பதில் பெரிய மகிழ்ச்சியே மனமெங்கும் பூக்கிறது.
சுவர் ஓவியங்கள் என்ன என்பதுபற்றி அறிந்துகொள்ள கோலாலம்பூர் மையத்தில் இருந்த புடு சிறைச்சாலை ஒரு காரணமாக இருந்தது.

சிறைச்சாலைக்கு அப்பாற்பட்ட குழுவினர் தங்கள் திறமைகளை ஒன்றுதிரட்டி சுவரில் காட்டினர். சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் அழகிய ஓவியங்களால் நிறைக்கப்பட்டன.
மொத்தத்தில் சிறைச்ங்ாலை என்ற பெயர் இருந்தாலும் வண்ணக் கலவைகளால் அதன் தோற்றம் மாறியதும் மக்களின் சிந்தனையும் மாறியது.

சிறைச்சாலை என்பதை மறந்து சிறகடிக்கும் எண்ணங்களைச் சுவர் ஓவியத்தில் பதித்தனர். இதற்கு சிறைச்சாலை வாரியம் அனுமதியும் வழங்கியிருந்தது.
ஓவியர்களின் ஓவியப்பசிக்கு சிறைச்சாலை சுற்றுச்சுவர் அகண்ட திரையாக அமைந்து வாய்ப்பை வழங்கியிருந்தது.

இதற்குப்பின் ஞாபகத்திற்கு வரும் இடமாக பினாங்கு மாநிலத்தின் முக்கிய சாலையில், சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையில் சுவர் ஓவியம் அமைந்திருந்தது. இவ்வோவியம் மிகப்பரவலாகப் பேசப்பட்டதையும் மறப்பதற்கில்லை.
சில்லறைகளாக இன்னும் சுவர் ஓவியக்கலை வாழ்கிறது என்பதற்கு மேம்பாலங்களின் அடிச்சுவர்கள் விளங்குகின்றன.

இவை அனுமதிக்கப்படாத ஓவியங்கள். இன்னும் எழுத்துப்படிவங்களாகவே இருக்கின்றன.

அதன் அடிப்படைதான் ஜாவி வனப்பெழுத்துகளாக பரிணமித்தனவோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

ஒருவேளை சுவர் ஓவிங்களே ஜாவி வனப்பெழுத்துகளுக்கு சூத்திரமாக இருந்திருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. இல்லாவிட்டாலும் இப்படியும் இருக்கலாம் என்பதிலும் தவறில்லை.

இதில், ஒன்றை மிகத்தெளிவாகக் கூற முடியும். மலேசியப் பள்ளிகளில் ஜாவி வனப்பெழுத்துப் பிரச்சினை ஓய்ந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. மீண்டும் வரலாம். வரக்கூடும். வந்துவிட்டது என்பதற்கான தூரமும் அதிகம் இல்லை.

சுவர் வனப்பெழுத்து இப்போது புத்தாடை அணிந்திருக்கிறது என்பதற்கு ஓர் ஆதாரம் காட்டலாம். நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்திருக்கும் வீடமைப்புப் பகுதிகளை மறைப்பதற்கு பயன்படுத்தப்படும் சுவர் ஓவியங்கள் நவீன இலைக்கியமாகவே இருக்கின்றன.

கலை வடிவ கண்ணாடித் தோற்றங்கள் பலவித பயன்பாட்டைக் கூறுகின்றன. பார்வைத் தடுப்பாகவும் கலைப்படைப்பாகவும். சாலைகளுக்கான கவர்ச்சியாகவும் சீற்றுப்பயணிகளின் பிரமிப்பாகவும் இச்சுவர்கள் விளங்குகின்றன என்பதை மறுக்கவே முடியாது.

சுவராக எழுப்பப்பட்டிருக்கும் தோற்றத்தால் சுவர் ஓவியக்கலை அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. சுவரே இல்லை சித்திரம் மட்டும் எப்படி உருவாகும் என்று கேட்டால் என்னதான் பதில் சொல்வது?

நவீனச் சுவர்களைச் சித்திரச் சுவர்களாக மாற்றினால் ஓவியம் திளைக்கும், ஓவியர்களின் தாகத்திற்கும் மருந்தாக அமையும்.

                                                                                                                                       இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here