சுஹாகாம் பணியாளர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று

சுஹாகாம் பணியாளர்களுக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று

கோலாலம்பூர், மார்ச் 12-

சுஹாகாம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணைய பணியாளர் ஒருவருக்கு ஒருவருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று கண்டிருப்பதாக அவ்வாணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்நபருக்கு இந்தத் தொற்று இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்டுள்ளதா என்பதை இன்னும் உறுதி செய்யாத நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை அடையாளம் கண்டு மருத்துவப் பரிசோதனை நடத்த சுஹாகாம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அவ்வகையில் தலைநகர் மெனாரா திஎச் பெர்டானா கட்டடத்தில் உள்ள ஆணையத் தலைமையக அலுவலகமும் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை மூடப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி தலைமையகத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொதுமக்களும் உடனடியாக மாவட்ட சுகாதார இலாகாவைத் தொடர்பு கொண்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும்படியும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

 எஸ். வெங்கடேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here