நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இலவச சுவாச கவசம்

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இலவச சுவாச கவசம்

கோலாலம்பூர், மார்ச் 12-
நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மொத்தமாக ௧ மில்லியன் சுவாசக் கவசங்கைளை வழங்குவதாக வின்னர் டைனஸ்டி ( Winner Dynasty Group) குழுமத் தோற்றுனரும் இயக்குநருமான டத்தோஸ்ரீ லியோ சூன் ஹீ அறிவித்துள்ளார்.

கோவிட் – 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தலை எதிர்கொள்ள மலேசிய நாட்டின் குடிமகனாக இது நான் செய்யும் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் முதல் தவணைக்கு நான் ஒரு கவசத்தை 1.70 வெள்ளி என்ற கணக்கில் வாங்கினேன். ஆனால் பின்னர் விலை இரட்டிப்பு ஆக்கப்பட்டது. மேலும் அந்த கவசங்களை விற்ற நிறுவனமும் உரிய ஆவணங்களை கொண்டிருக்க வில்லை. எனவே அந்த ஆர்டரை ரத்து செய்தேன்.

இது உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும். இதில் கூடுதல் லாபம் பார்க்க கூடாது. தற்போது தக்க விலையில் இந்த கவசங்களை விற்க முன்வரும் நிறுவனங்கள் எங்கள் குழுமத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் டத்தோஸ்ரீ லியோ குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மாணவர்களுக்கு முக கவசம் பெறுவதில் பொருளாதார ரீதியாக சிரத்தை எதிர்நோக்கிய பூச்சோங் கேன் சீ சீனப் பள்ளிக்கும் அவர் 2,000 கவசங்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                                                                                               எஸ் . வெங்கடேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here