கொரோனாவுக்கு சுங்கைபூலோ மருத்துவமனை

கொரோனாவுக்கு சுங்கைபூலோ மருத்துவமனை

கொரோனா 19 தொற்றுக்கு சுங்கைபூலோ மருத்துவமனை பிரத்தியேக மருத்துமனையாக இயங்கிவருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆடம் பாபா தெரிவித்திருக்கிறார்.

இம்மருத்துவமனையில் போதிய கருவிகள் பொருத்தப் பட்டிருக்கின்றன.
நவீன வசதிகளுடன் செயல்படும் இம்மருத்துவமனையோடு நாட்டில் 12 மருத்துவமனைகள் கொரோனா 19 தொற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன என்று இம்மருத்துமனைக்கு வருகை புரிந்த அவர் தெரிவித்தார். இம்மருத்துமனைகளில் போதுமான ஆய்வுக்கூட வசதிகள் இருக்கின்றன.

இவற்றோடு 57 மருத்துவமனைகள் கொரோனா 19 நோய்த்தடுப்புக்கான வசதியைக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஒரே சமயத்தில் 772 பேர்களுக்கு மருத்துவம் பார்க்கும் வகையில் அமைந்திருக்கும் சுங்கைபூலோ மருத்துமனையில் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கொரோனா 19 தொற்று இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகத்தெரிவித்த அவர், பொதுசுந்திப்புகளை ஒத்தி வைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நோய்த்தொற்று குறித்த சந்தேகத்திற்கு 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படும். இதற்கான நிதியை தேசியப்பேரிடர் நிர்வகிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here