கோலாலம்பூர், மார்ச் 14-
இந்திய திரைப்படங்களுக்கு நிகராக உள்ளூர் திரைப்படங்களும் வெளியாகி வரும் நிலையின் ஓர் அங்கமாக அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அழகிய தீ‘ மலேசியத் திரைப்படத்தைத் தொடர்ந்து ஏடி மூவிஸ் தயாரிப்பில் ‘அதையும் தாண்டி # புனிதமானது’ திரைப்படம் பல திரையரங்குகளில் வெளியீடு கண்டுள்ளது. இத்திரைப்படம் மலேசியர்களின் கலாச்சாரத்தை அழகாக சித்திரிக்கும் படைப்பாக உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படம் குறித்து அதன் தயாரிப்பாளர் டத்தோ ஏத்தி கூறுகையில் மனிதர்களாகிய அனைவருக்கும் ஆசைகள் இருக்கின்றன. நமது எண்ணங்களை புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. அதிலும் வயதானவர்கள் பலர் நிறைவேறாத ஆசையோடு இருக்கின்றனர்.
அவ்வாறான வயதானவர்களை மையமாகக் கொண்டு குடும்பப் பாங்குடன் அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ‘அதையும் தாண்டி # புனிதமானது’ வெளிவரவுள்ளது.
குடும்பம், காதல், உணர்வு என அனைத்தையும் சரிவிகிதப்படி கலந்து சுவை மிகுந்த கலவையாக இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினரும் கண்டு களிக்கும் வகையில் ஆபாங் காட்சிகள் துளியும் இல்லாத, கண்ணியமிகுந்த ஆடைகளை மட்டுமே அணியும் கதாபாத்திரங்கள்.
ஏடி மூவிஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் ‘அதையும் தாண்டி # புனிதமானது’ திரைப்படம் குடும்பப் பாங்குடன் மிளிர்ந்து வரும் நிலையில் ரசிகர்கள் திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டு களிக்கலாம்.
இளம் இயக்குநர் விக்னேஷ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவராஜ், வெனிஸா குரூஸ், வெமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ‘அதையும் தாண்டி # புனிதமானது’ மலேசிய திரைத்துறையில் மற்றொரு மைல் கல்லாக அமையும் என திரைப்படத்தை கண்ட ரசிகர்கள் கருத்துரைத்துள்ளனர்.