கோலாலம்பூர் –
கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஆலோசனை கூறப்பட்ட நிலையில் கொரோனாவைத் தவிர்க்க இப்படியும் செய்யலாம் எனக் கூறி ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
ஒருவர் இரும்புக் கம்பி வளையத்தைத் தனது வயிற்றைச் சுற்றிக் கட்டிக் கொண்டிருக்கிறார். அது எப்படியும் 2 அடி தூரத்திற்கு அருகில் யாரையும் நெருங்கவிடாத அளவுக்கு உள்ளது.
யாராவது தும்மினால் கூட அது காற்றில் இவரிடம் வந்து சேரும் வாய்ப்பும் குறைவு. யாரும் நெருங்கி வந்து பேசவும் முடியாது.