பெண்ணின் உடல் 100 ஆண்டுக்கு பிறகு அடக்கம்

100 ஆண்டுகள் ஆன நிலையில் அடக்கம்

லண்டன்,மார்ச் 16-

இங்கிலாந்து நாட்டில் சுந்தர்லேண்ட் நகரில் பிறந்தவர் மேமி ஸ்டூவர்ட். இவர் நடன மங்கையாக இருந்து வந்தார். 1918-ம் ஆண்டு ஜார்ஜ் ‌ஷாட்டன் என்ற கப்பல் என்ஜினீயரை திருமணம் செய்து கொண்டார்.

26 வயதான நிலையில் 1919-ம் ஆண்டு இவர் காணாமல் போனார். அடுத்த சில தினங்களில் அவர் கொலை செய்யப்பட்டது பின்னர் தெரிய வந்தது. 1961-ம் ஆண்டுதான் அவரது உடல் துண்டு துண்டாக வெட்டி போடப்பட்ட நிலையில் ஒரு ஈய சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் அது என்ன ஆனது என தெரியாமல் போய் விட்டது.

இந்த நிலையில், அவரது உடல், கார்டிப் தடய அறிவியல் ஆய்வகத்தில் ஒரு அலமாரியில் சுமார் 60 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை, இப்போது அவரது மூத்த மருமகள் சுசீ ஓல்டுநல் கண்டுபிடித்தார். அவரது முயற்சியினால் மேமியின் உடல் மீட்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன் சுந்தர்லேண்டில் மேமியின் உடல், முறைப்படி அவரது பெற்றோர் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது.

100 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட மேமியின் உடல் இப்போது அடக்கம் செய்யப்பட்டது, சுந்தர்லேண்ட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here