கெந்திங்மலை நடவடிக்கைகள் தற்காலிக முடக்கம் கோவிட் 19 காரணம்

கெந்திங்மலை நடவடிக்கைகள் தற்காலிக முடக்கம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 17-

உலகப்புகழ்பெற்ற கெந்திங் மலை கோவிட் 19 தொற்றின் காரணமாக மார்ச் 18 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது என்று அதன் அகப்பக்கத்தில் அறிவித்திருக்கிறது.

உள்அரங்க விளையாட்டுகள் , தீம்பார்க்,சுதாட்ட இடம். உணவு பகுதி, மது பான பகுதி என அனைத்தும் தற்காலிகமாக மூடப்படுகிறது.

முன்பதிவு செய்யப்பட்டிருந்தால் தேதிமாற்றம் செய்துகொள்ளலாம். தேதி மாற்றத்திற்கு இயலாமை ஏற்படுமானால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கெந்திங்மலை நடவடிக்கைகள் நிறுத்தம் தற்காலிகமானதுதான். இதன் அனைத்து நடவடிக்கைகளும் ஏப்ரல் முதல் நாளில் நடப்பில் இருக்கும் என்றும் அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here