திருமணம் செய்ய கோவிட் 19 தடை? அடங்கிப்போயிற்று ஆடம்பரம்

திருமணம்

கோலாலம்பூர், மார்ச். 17
ஆடம்பரத் திருமணங்கள் வேண்டாம் என்று சொன்னபோது மறுத்த மாப்பிள்ளைகள் இப்போது அர்ச்சனை திருமணைத்திற்குத் தயாராகி வருகின்றனர்.

கோவிட் 19-இன் தாக்கம் பலரின் திருமணத்திற்கு உலை வைத்திருக்கிறது. பெரிய மன்டபங்களில், ஆடம்பரச்செலவுகளில் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் வெடிக்காத வெடிகளாகிவிட்டன என்று பினாங்கு மாநில இந்து சங்கத் தலைவர் எம்.முனியாண்டி தெரிவித்திருக்கிறார்.

இந்து சங்கம் ஆடம்பரத் திருமணங்களை எப்போதுமே விரும்பியதில்லை. ஆதரிப்பதுமில்லை. ஆனாலும் திருமணம் செய்துகொள்வதற்குத் தயாராக இருக்கின்றவர்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படவோ கருத்துக்கூறவோ பினாங்கு மாநில இந்து சங்கம் விரும்பியதில்லை.

ஆலோங்னகள் எடுபடாதபோது, ஆக்கிரமிப்பு ஆதிக்கம் செலுத்திவிடும் என்பார்கள். அதைத்தான் கோவிட் 19 செய்திருக்கிறது.

இது தொற்று மட்டுமல்ல, திருமணத்திற்கு இடையூறு செய்யவந்த பெரும் எதிரி.
அவசரமாகச் செய்யப்படும் திருமணைத்தை அர்ச்சனைத் திருமணம் என்பார்கள்.

அர்ச்சனைத் திருமணம் என்பது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் திருமணமாகத்தான் இருக்கும்.

இந்த வகைத் திருமணமே இக்காலக்கட்டத்திற்குச் சிறந்தது என்றாகிவிட்டது. அப்படியே ஆக்கப்பட்டுவிட்டது. இக்கைங்கரியத்தைக் கோவிட் 19 செய்திருக்கிறது. அதன் ஆளுமையை மீறிச் செய்யமுடியாது என்றாகிவிட்டது. ஆலயங்களும் மீறிச் செயல்படமுடியாது.

இது காலத்தின் கட்டாயம். எந்த நல்ல நேரமும் இனி கோவிட் 19 முன் எடுபடாது என்றாகிவிட்டது. ஆடம்பரத்திற்கு வழியே இல்லை.

ஆலயத்திலும் திருமணம் செய்ய வழியில்லை. சுறுக்கிக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. கூட்டம் கூடும் எந்த நிகழ்ச்சியும் நடத்தமுடியாது.

திருமணத்தை கோவிட் 19 ஒத்திப்போடச்செய்கிறது என்றால் அர்ச்சனை திருமணத்திற்கு மாறுக. காசு மிச்சப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here