பெட்டாலிங்ஜெயா, மார்ச் 17-
வங்கிக்கடன் செலுத்துவதை மறு பரிசீலனை செய்யுமாறு எம்டியூசி பொதுச்செயலாளர் ஜே.சாலமன் மலேசிய வங்கிகளைக் கேட்டுக்கொண்டார். மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ப திரும்பச் செலுத்தப்படும் கடன்களை முறைப்படுத்துமாறு அவர் அலோங்னை கூறினார்.
கோவிட் 19 பாதிப்பால் பொருளாதாரப் பாதிப்பில் இருப்போர் கடன்களைச் திரும்பச்செலுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்கலாம். இதற்கு மாற்றாக திரும்பச்செலுத்தும் வகையில் மாற்றுத்திட்டங்களை வங்கிகள் உருவாக்கித் தரவேண்டும்.
கோவிட் 19 அனைத்து மக்களையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. சம்பளமில்லா விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது.
இது பற்றியெல்லாம் வங்கிகள் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. கடனைச்செலுத்தும்படி கட்டாயப் படுத்துவதற்குப் பதிலாக மாற்று வழிகளை ஆராயலாம்.
சில வங்கிகள் மாற்றுத் திட்டத்திற்குத் தயாராகிவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.