14 நாட்கள் கடையடைப்பு – வர்த்தகர்களுக்கு வேதனை

கிள்ளான்:

கோவிட் 19 வைரஸ் உலகளாவிய நிலையில் அதிகரித்து வரும் வேளையில் மலேசியாவில் 500க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் நாளை 18/3 தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு அத்திவாசிய தேவைகளை தவிர்த்து மற்றவைகள் அனைத்தும் மூடப்படும் என்று பிரதமர் மொகிதீன் யாசின் நேற்று (16/3) இரவு அறிவித்தார். இதன் தொடர்பில் இந்திய ஜவுளி வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ இரா.ரகுமூர்த்தி கூறுகையில் இந்த கடையப்பு எங்களை போன்ற வர்த்தகர்களுக்கு பெரும் சோதனையான மற்றும் வேதனையான விஷயம் என்றார். காரணம் வங்கிகள் இந்த காலகட்டத்தில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எங்களை போன்றவர்கள் வியாபாரம் நடத்த கூடாது என்று கூறியிருக்கின்றனர். எங்கள் வியாபாரத்தை நம்பி விநியோஸ்தகர்களுக்கு காசோலை (செக்) வழங்கியிருக்கிறோம். மேலும் தொழிலாளர்களின் தங்குமிடம், உணவு ஆகியவற்றையும் கவனிக்க வேண்டிய பொறுப்பில் என்னை போன்ற முதலாளிகள் இருக்கின்றனர். 14 நாட்கள் கடையடைப்பு என்பது நாங்கள் தலை நிமிர முடியாத அளவிற்கு பிரச்சினையை ஏற்படுத்தும். பிரதமர் எங்களை போன்ற வர்த்தகர்களின் நிலையை கவனித்துக் கொண்டு சிறந்த தீர்வு காண வேண்டும் என்று 40 ஆண்டு வரத்தகத்தில் அனுபவம் கொண்ட டத்தோ ரகுமூர்த்தி தனது மனக்குமுறலை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here