கோவிட் இறப்பு ஒரு பாடம்

கோவிட் 19 தாக்கத்தால் இரு இறப்புகளை மலேசியா சந்தித்திருக்கிறது என்பது மிக வருத்தமான செய்தியாகும். 34 வயது இளைஞர் ஜோகூர் மருத்துவமனையிலும் 60 வயது பாஸ்டர் சரவாக் பொது மருத்துவமனையிலும் இறந்திருக்கின்றனர்.

178. 358 ஆகிய பதிவுகளின் வரிசைப்படி இந்த இறப்பு ஏற்பட்டிருக்கின்றன என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்திருக்கிறார்.

34 வயதான இளைஞர் ஓர் தப்லிக் ஒன்றுகூடலில் கலந்துகொண்டவர். இவருக்கு மார்ச் 5-ஆம் நாள் அறிகுறி தென்பட்டதும் ஜோகூர் பாரு பெர்மாய் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்றின் தாக்கம் கடுமையானதால் சுல்தானா அமினா மருத்துவமனைக்கு மார்ச் 12 ஆம்நாள் மாற்றப்பட்டார்.

இவரின் இறப்பை சுகாதார அமைச்சீசு உறுதி செய்திருக்கிறது. இவரின் அடக்கச்சடங்கில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நாட்டின் கொரோனா 19 எண்ணிக்கை 673 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 438 பேர்
ஸ்ரீ செர்டாங்கில் நடந்த தப்லிக் ஒன்றுகூடல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாடல்கள் இயற்றுவதில் வல்லவராக திகழந்தவர் இவர். பாடல்கள் தொகுப்பு ஒன்றையும் 2011 இல் வெளியிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here