ஆச்சரியப்பட வைக்கும் உலகின் அதிசய மனிதர்கள்

ஸ்டீபன் வில்ட்ஷைர்-மனித கேமிரா!பிரிட்டிஷ் காரரான ஸ்டீபன் வில்ட்ஷைர் என்பவர், தன் கண்ணில் பார்க்கும் எதையும் ஒரு சிறு பிழையின்றி அப்படியே வரைந்து விடும் அதீத திறமையை கொண்டுள்ளார். இவர் கண்களால் கண்டு வரையும் ஓவியமும், நவீன கேமராவில் அதே கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு பிழை கூட இருக்காதாம். இவர் அவ்வப்போது ஹெலிகாப்டரில் பறந்து அவர் கண்ணில் படும் காட்சிகளை ஓவியமாக வரைந்துள்ளார்.

விம் ஹால்ப்- பனி மனிதன்.!விம் ஹால்ப் எனும் இவர் உறையவைக்கும் பனியிலும் சர்வ சாதாரணமாக பல மணிநேரம் இருக்கும் வல்லமையை கொண்டுள்ளார். இவர் இதுவரை 20 கின்னஸ் ரெகார்ட் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதில் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களுக்குள் கிளிமாஞ்சாரோ எனும் பனி மலையை கடந்த சாதனையும் அடங்கும். ஒரு சின்ன ஐஸ் கட்டி மேல விழுந்தாவே துள்ளி குதிக்கும் நமக்கு இவர் சூப்பர் ஹீரோ தான்.

டேனியல் கிஸ்.!இவர் விழித்திரையில் உருவான கேன்சரின் காரணமாக தனது இரண்டு கண்களின் பார்வையையும் இழந்தவர். மற்ற பார்வை இழந்தாரைப்போல் அல்லாமல் வௌவால் மற்றும் திமிங்கலம் (எக்கோ லொகேஷன்) தனது நாக்கின் மூலம் ஒரு வித ஒலி எழுப்பி பிறகு அது பாதையில் இருக்கும் ஏதாவது பொருளின் மீது பட்டு எதிரொலிக்கும் ஒலியைக்கொண்டு தனது பாதையை தேர்ந்தெடுப்பது போல் இவரும் செய்கிறார். இவரைப்போன்ற அனைவருக்கும் இவர் எக்கோ லொகேஷன் முறையை சொல்லிக்கொடுத்து , எப்படி பார்வையுள்ளவர்கள் போல் நாமும் வாழ்வது என பயிற்சியளித்து வருகிறார்.

டிம் கிரிட்லண்ட்.!இவருக்கு பிறப்பு முதலே வலியை உணரும் தன்மை இல்லை. பொதுவாக ஏதேனும் நமது உடலில் காயம் ஏற்பட்டால் நரம்புகளிலிருந்து மூளைக்கு சிக்னல் செல்வதன் மூலம் நாம் வலியை உணர்கிறோம். ஆனால், இவருக்கு உடலில் வலி ஏற்படும் போது எந்த சிக்கினலும் மூளைக்கு செல்வதில்லை ஆகவே இவருக்கு வலி என்றால் என்னவென்றே தெரியவில்லை. இதனை காசாக மாற்ற நினைத்த அவர் ” சமோரா த டார்ச்சர் கிங்” எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் , கம்பியை கொண்டு உடலில் பல பகுதிகளில் ஓட்டை போடுவது, நெருப்பு கட்டியை முழுங்குவது போன்ற பல அறிய செயல்களை செய்து பிழைத்து வருகிறார்.

டேவ் முள்ளின்ஸ்.!நம்ம கொஞ்ச நேரம் மூச்சு பிடித்து தண்ணீரில் இருப்பதே பெரிய விஷயம் ஆனால் நியூசிலாந்தை சேர்ந்த டேவ் முள்ளின்ஸ் எனும் இவர் நான்கு நிமிடத்திற்கு மேலாக மூச்சு பிடித்து கடலின் அதிக ஆழம் (266 meter)சென்றதற்காக பல கின்னஸ் ரெகார்ட் வைத்துள்ளார். இவர் நீர் மனிதன்
(AQUA MAN ) எனவே அறியப்படுகிறார்.

மைக்கல் லோடிடோ.!இவர் இரும்பு, கண்ணாடி, ரப்பர் போன்ற அனைத்தையும் சர்வ சாதாரணமாக உண்ணும் திறமை கொண்டவர். இவர் இதுவரை ஒரு விமானம், 21 தொலைக்காட்சிகள் , 1 காட்டில் , 2 பீரோ போன்றவற்றை சாப்பிட்டு உயிர் வாழ்கிறார். இவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் இவரது ஜீரண சக்தியை பார்த்து மிரண்டு போகின்றனர்.

டேனியல் பிரௌனிங்.!உடலை எப்படி வேண்டுமானாலும் சுருக்கி விரிக்கும் டேனியல் பிரௌனிங் ஸ்மித்தே அந்த ரப்பர் பாய். டென்னிஸ் பேட்டில் தனது உடலை உள்ளே கொண்டு செல்வது தான் இவரின் தனி சிறப்பு.

கிம் பீக்ஸ்.!சமீபத்தில் “த ரைன் மேன்” எனும் ஹாலிவுட் படம் வெளியாகி ஆஸ்கார் வென்றுள்ளது. அக்கதை கிம் பீக்ஸ் என்பவரின் உண்மை கதையே.இவரால் மிகப்பெரிய புத்தகத்தினை கூட 1 மணி நேரத்தில் படித்து முடிக்க முடியும். ஆம் , இவரால் இடது கண்ணில் ஒரு பக்கத்தையும் , வலது கண்ணில் இன்னொரு பக்கத்தையும் ஒரே சமயத்தில் படிக்க முடியும் அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 98 சதவீதம் சரியாக பதிலளிக்கவும் செய்கிறார்.எனவே , இவர் மனித என்சைக்ளோ பீடியா எனவும் அறியப்படுகிறார்.

ஸ்லாவிசா பல்ஜிக்.!செரிபியாவில் பிறந்த ஸ்லாவிசா பல்ஜிக் எனும் இவர் , தனது உடம்பிலிருந்து மின்சாரத்தை வெளியிடுகிறார். இவர் தனது கைகளாலேயே தண்ணீரை 97 டிகிரி வரை சூடு செய்ய முடிகிறது. ஒரு முறை இவர் மின்சார வேலியை தொட்டதாகவும் அப்போது ஷாக் அடிக்கவில்லை எனவும், அப்போதிலிருந்துதான் இந்த சக்தி தனக்கு கிடைத்ததாகவும் கூறுகிறார். இவர் எப்போ மின்சாரம் வெளியாகணும்னு நினைக்கிறாரோ அப்போதான் வெளியாகும் மத்த சமயங்களில் மின்சாரம் வெளிப்படாது. இதுவரை 2 கின்னஸ் ரெகார்ட் படைத்துள்ளார்.

நட்டாஷா.!ரஷ்யாவை சேர்ந்த நட்டாஷாங்கிற இந்த பொண்ணுக்கு தான் X-RAY பார்வை இருக்கு. இந்த பொண்ணுக்கு யாரையாவது பார்க்கும் போது உள்ள இருக்கும் எல்லா ஸ்பார் பார்ட்ஸும் கண்ணுக்கு தெரியுமாம். இந்த பொண்ணு பொய் சொல்லுதுனு நினைச்ச டாக்டர்ஸ் , டெஸ்ட் பண்ண 7 பேஷண்டை கொண்டு வந்தாங்க. இங்க இருப்பர்வகள் ல யாருக்கு தலையில மெட்டல் வச்சுருக்கு , கிட்னி ஆபரேஷன் யாருக்கு பண்ணிருக்குனு அந்த பொண்ண கண்டுபிடிக்க சொன்னாங்க .7 பேத்துல 5 பேருக்கு கரெக்ட் டா இந்த ஆபரேஷன் தான் பண்ணிருக்குனு கரெக்ட்டா கண்டுபுடிச்சுருச்சு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here