இந்தியாவுக்குள் நுழையத் தடை

புதுடில்லி –

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் 36 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்தியாவுக்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், கடந்த 12ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரேக்கம், ஐஸ்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எந்தவொரு விமானம் மூலமும் பயணிகள் அழைத்து வரப்படுவதில்லை.

பிலிப்பின்ஸ், மலேசியா மற்றும் ஆப்கானிஸ் னில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்தோ, அந்நாடுகள் வழியாகவோ புதன்கிழமை மாலைக்குப் பிறகு அழைத்துவரப்படும் பயணிகள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவர்.

இந்தியாவில் உள்ள வெளிநாட்டினர் அவர்களின் நுழைவு இசைவை நீட்டித்துக் கொள்ள லாம். அதற்காக அவர்கள் வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகங்கள் அல்லது அந்த அலுவலகங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், இந்தியாவைவிட்டுச் செல்ல அனுமதியுண்டு. அதே வேளையில் அவர்கள் மீண்டும் இந்தியா வர சம்பந்தப்பட்ட இந்தியத் தூதரகங்களில் இருந்து புதிதாக நுழைவு இசைவு பெறவேண்டும்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி குழந்தைகள் இந்தியத் தூதரகங்களில் இருந்து நுழைவு இசைவுபெற்ற பின் இந்தியா வரலாம் என்று அந்தச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here