பெர்சத்து கட்சியியின் பொதுச்செயலாளர் பணிநீக்கம் கருத்துரைக்க மறுப்பு

டத்தோ மர்சுக்கி யாஹ்யா

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 20-

பிரிபூமி மலேசியா கட்சி அல்லது பார்ட்டி பெர்சத்து கட்சியின் பொதுச்செயாலாளர் டத்தோ மர்சுக்கி யாஹ்யா கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் இதனைத் தெரிவித்திருக்கிறார். பிரதமரின் கடிதத்தை உறுதிப்படுத்தியிருப்பதாக மர்சுக்கி யாஹ்யா உறுதிபடுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

கட்சியின் பொறுப்பில் இருந்த காலத்தில் ஆற்றிய கடமைளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

துன் மகாதீர் ஆட்சியின்பொது செனட்டர் மர்சுக்கி வெளியுறவு அமைச்சராக இருந்தவர். கட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகத்தெரிகிறது. இவரை கெடா மந்திரி பெசாரும் முன்னாள் பெர்சத்து கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் பரிந்துரத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது வேட்பு மனுவை துன் டாக்டர் மகாதீர் வழங்கியிருந்தார்.

துன் டாக்டர் மகாதீர் இது குறித்து கருத்துகள் கூறும் வரை பணிநீக்கம் குறித்து கருத்து கூற இயலாது என்று மர்சுக்கி தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here