2020 ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைக்க நெருக்குதல்

தோக்கியோ –

2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்ததற்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிரீஸ் தடகள வீராங்கனை கெத்ரினா நேற்று கூறுகையில் அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டாளர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த மறுக்கிறது.
ஒரு போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த விளையாட்டாளர்கள் ஒன்றாக பங்கேற்க வேண்டும். ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற போட்டிகளில் பலர் தொடக்கூடிய பொருள்களை மற்றவர்கள் தொட வேண்டியதிருக்கும். இதை ஒலிம்பிக் கமிட்டி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

பிரரான்ஸைச் சேர்நத 110 மீட்டர் தடைதாண்டும் வீரரான பாஸ்கல் மார்டினோட் கூறுகையில், ஒலிம்பிக் போட்டியை ஒத்திவைப்பதே சிறந்த முடிவாக இருக்கும். ஒரு சில நாடுகள் கொரோனா வைரஸால் அதிகமாகவும் சில நாடுகள் குறைவாகவும் பாதிக்கப்பட்டுள்ள. இந்த ஆண்டு இறுதி வரை ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டால் நல்லது என்றார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எழுந்துள்ள சுழலில் தோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான தீர்வைக் காண வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்று அனைத்துலக ஒலிம்பிக் கமிட்டி குழு தெரிவித்துள்ளது.

போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டிருக்கிறோம். அதேநேரம், ஒலிம்பிக் போட்டியையும் திட்டமிட்டபடி நடத்த வேண்டிய சூழலில் உள்ளோம் என்று அக்குழு அறிவித்துள்ளது.

ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here