COVID 19 இளைஞர்களையும் தாக்கும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக சுகாதார அமைப்பின் தலைமையகம்

ஜெனிவா,மார்ச் 21-

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை தடுக்க முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. இந்த வைரஸ் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களையும் அதிக அளவில் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளம் வயதினரை எளிதில் தாக்காது என்று கருதப்பட்ட நிலையில், தற்போது இளைஞர்களையும் கொரோனா தாக்க தொடங்கி உள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் அதானம் கேபிரியசஸ் கூறுகையில், இன்று இளைஞர்களுக்காக ஒரு தகவலை கூறுகிறேன். கொரோனாவில் இருந்து நீங்களும் தப்பிக்க முடியாது. கொரோனா வைரசானது உங்களை வாரக்கணக்கில் மருத்துவமனையில் முடக்கி விடலாம். உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம். நீங்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதைப் பொருத்து நோய்த்தாக்கம் இருக்கும் என கூறியுள்ளார்.

எனவே, பொது இடங்களுக்கு செல்லும்போது இளைஞர்களும்
மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here