சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது.
கொரோனா வைரசால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் விழிபிதுங்கி நிற்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
வைரசின் பிறப்பிடமான சீனாவைவிட தற்போது இத்தாலியில் தான் அதிக அளவு பாதிப்பு காணப்படுகிறது.
இத்தாலியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 793 பேர் பலியாகியுள்ளார்கள்.
ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்த மக்களில் 38.3 சதவீதம் இத்தாலியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.
ஒட்டு மொத்தமாக இத்தாலியில் கொரோனா வைரசால் 4,825 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,578 ஆக உள்ளது. இவர்களில் 6,072 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில், 42,681 பேர் சிகிச்சையில் உள்ளனர்.