சீருடை அணிந்த பணியாளர்களுக்கு பெலித்தா நாசிகண்டார் ஏற்பாட்டில் இலவச உணவு

கொரோனா அச்சுறுத்தலை ஒடுக்குவதற்கு அரசாங்கம் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுபாடு விதிக்கும் உத்தரவை மார்ச் 31ஆம் தேதி வரை அமல்படுத்திருக்கிறது.

வழக்கம்போல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் சீருடை அணிந்த பணியாளர்களும் பெலித்தா நாசிகண்டார் இலவச உணவு வழங்குகிறது. அந்த உணவினை சீருடை அணிந்த அதிகாரிகள் பெற்று செல்கின்றனர்.

அவர்கள் பெலித்தா நாசிகாண்டார் சென்று உணவுப் பொட்டலத்தை பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ அட்டையை (கார்டு) காட்ட வேண்டும்.


ஒருவருக்கு ஒரு உணவுப் பொட்டலமும் ஒரு தே ஐஸ் லீமாவும் வழங்கப்படும் என்று பெலித்தா சமுத்ரா பெர்தாமா நிறுவனத்தின் நிர்வாகம் தனது அறிக்கையில் கூறியது.

மலேசியர்களுக்காக உழைக்கும் நமது ஹீரோக்களுக்கு நன்றி கூறுகிறோம் என்று பெலித்தா தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here