காலை 7 தொடங்கி இரவு 10 வரை ஏடிஎம் சேவைகள்

கோலாலம்பூர் –

பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் வங்கிகளின் ஏடிஎம் இயந்திர சேவையும் மற்ற தானியங்கி சேவையும் காலை 7 மணி தொடங்கி இரவு 10 மணி வரை மட்டுமே நீடிக்கும்.

பேங்க் நெகாரா மலேசியா இதனை அறிவித்தது. எனினும் இந்த உத்தரவினால் பாதிக்கப்படாத பகுதிகளில் ஏடிஎம் இயந்திரங்களும் ரொக்க பணத்தை செலுத்தும் இயந்திரங்களும் காசோலைகள் மற்றும் சில்லறை நாணயங்களை செலுத்தும் இயந்திரங்களும் முழுமையாக செயல்படும்.

ஆன்லைன் வங்கி சேவைகள், வங்கி கிளைகளில் நாணய மாற்று சேவைகள் வழக்கம்போல் செயல்படும். காப்புறுதி தொடர்பான பணிகளும் இழப்பீடு கோரிக்கைகளும் காப்புறுதி பாலிசி புதுப்பிப்பதும் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் எனவும் அது கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here