பயணபத்திரங்கள் முக்கியமல்ல பணிதல் முக்கியம்

கோலாலம்பூர், மார்ச் 23-

மலேசிய நாட்டிற்குள் எப்படி நுழைந்தார்கள்? இப்போது அதுவல்ல அராய்ச்சி. அதற்கான பத்திரங்கள் இருக்கிறதா என்பதும் முக்கியமல்ல. கோரோனா சோதனை மட்டுமே மிக முக்கியம் என்பதாக டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்திருக்கிறார்.

சட்டத்திற்குப்புறம்பாக நாட்டில் தங்கியிருப்பது குற்றம். ஆனாலும் அதைவிட பெருங்குற்றம் கொரோனா தொற்று சோதனை செய்துகொள்ள மறுத்து, ஒளிந்துகொண்டிருப்பது என்கிறார் அமைச்சர்.

சிலாங்கூர் மாநிலத்தில் பெட்டாலிங் ஜெயா அருகில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங் மசுதியில் கூடியவர்களிடமிருந்தே அதிகமான கொரோனா பரவியிருப்பதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. இது கட்டுக்கதையோ அவமனப்படுத்தும் எண்ணமும் அல்ல.

இன்பத்தில் பங்குகொள்ள வேண்டியது முக்கியமல்ல. ஆனால் துன்பம் வரும்போது அது அனைவரையும் பாதிக்கும் என்பதற்கு கோரோனா 19 சான்றாக இருக்கிறது.

இதுவரை 9 ஆயிரம் பங்கேற்பாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்று போலீஸ் கூறியிருக்கிறது. பயணப்பத்திரங்கள் முக்கியமல்ல. பரிசோதனை மட்டுமே முக்கியம். கொரோனா இருந்தால் தனிமைப்படுத்தப்படுவர் என்பது மட்டுமே என்று அமைச்சர் கூறியிருக்கிறார்.

அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாது. இறப்பு நேர்ந்துவிடக்கூடாது என்று அரசு அக்கறைகொள்கிறது. அதனால் தைரியமாக பரிசோதித்துக் கொள்ள முன்வருமாறு டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

லெம்பா பந்தாய், தித்திவங்சா, கெப்போங், செராஸ் ஆகிய 4 பகுதிகள் கொரோனா 19 பாதிக்கப்பட்ட இடங்களாக சிவப்புக் கூறியீட்டில் இருப்பதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா கூறியிருக்கிறார்.
மக்கள் பாதுகாப்பு என்பது சட்டத்தில் இல்லை. மக்கள் ஒத்துழைப்பில் இருக்கிறது என்பதை மக்கள் நம்பவேண்டும். அதுதான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here