பயணிகளுக்கு முகக்கவசங்கள் டோல் சாவடிகளில் வழங்கலாம்!

முகக்கவங்ங்கள் டோல் சாவடிகளில் வழங்கலாம்!

கோலாலம்பூர், மார்ச், 23-

சாலைகளில் பயணம் செய்கிறவர்கள் குறைந்திருக்கிறார்கள், பயணிக்கின்றவர்களின் இன்றைய பிரச்சினை முகக்கவசங்கள் இல்லை என்பதுதான். அங்கே, இங்கே, எங்கே என்பதில் எரிச்சலடைய வேண்டியிருக்கிறது.

எங்கு தேடினும் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்கின்றவர்களுக்குச் சாலைக் கட்டணப் பகுதிகளிலும் சாலைத்தடுப்புப் பகுதிகளிலும் முகக்கவசம் வழங்கலாம் என்று சிலர் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

சீனாவில், இருந்து ஒரு கோடி முகக்கவங்ங்கள் தருவிக்கப்படுகின்றன. இவற்றைக் கையாளும் பொறுப்பில் ராணுவம், அல்லது போலீஸ்துறையை இணைத்துக்கொள்ளலாம்.

பயணிகளுக்குத்தான் அதிகமான முகக்கவசங்கள் தேவைப்படுகிறன்றன. ஆதலால், பயணிகளைச் சோதிக்கும் இடங்களில், நுழையும் இடங்களில் மட்டும் முகக்கவசங்கள் கையாளப்படுதல் நன்மைதரும்.

முகக்கவசங்கள் வாங்கும் இடங்களில் இல்லை என்ற பதிலைத் தவிர வேறொன்றுமில்லை. இனியும் அக்கடைகளில் விசாரிப்பதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள். ஆதலால் மாற்றுவழியத் தேடுகின்றனர்.
சீனாவிலிருந்து வருகின்ற ஒரு கோடி முகக்கவசங்கள் தவறான கைகளுக்குப் போய்விடக்கூடாது. இதில் செல்வாகு தேவையில்லை என்பதிலும் கவனமாகச் செயல்படவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here