இன்றிரவு 12 மணி தொடங்கி ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு

பிரதமர் மோடி நாட்டு மக்ககளுக்கு உரையாற்றி வரும் நிலையில் இன்றிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊடரங்கு கடைபிடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாநில அரசுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில் பாரத பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொதுமக்கள் தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் மட்டுமே கொரோனா வைரசை விரட்ட முடியும் என்று தெரிவித்த அவர், 22-ந்தேதி பொதுமக்கள் சுயுஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதன்படி நேற்று முன்தினம் (22-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) நாடு தழுவிய சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இருந்தாலும் இந்தியா முழுவதும் பொதுமக்கள் அதை சரியாக கடைபிடிக்கவில்லை. பொதுஇடங்களில் அதிக அளவில் கூடினர். இதனால் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுருந்தது. அதனடிப்படையில் பெரும்பாலான மாநிலங்கள் ஊடரங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

இந்நிலையில் இன்று பாரத பிரதமர் மோடி 2-வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

1. 22-ந் நடைபெற்ற சுய ஊரடங்கு வெற்றிகரமான நடைபெற ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி

2. கொரோனாவை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமூக விலகல் தவிர்க்க முடியாதது. இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி. தம்மை தாக்காது என யாரும் நினைக்க வேண்டாம்.

3. இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு மக்களும் எனக்கு முக்கியம். இதனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மோடி உரையில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here