கொஞ்சம் தியாகம், கொஞ்சம் மௌனம்

எம்சிஓ எனும் மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படலாம் என்று கோடிகாட்டப்பட்டிருக்கிறது. இது சாதாரணமாகி விடக்கூடாது.

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு என்பதும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையும் ஒன்றாகவே கருத்தப்படவேண்டும் என்பதாய் எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆயுதப்படை களத்தில் கடமை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள், இது போலீசாருக்கு உதவியாக அமைந்திருக்கிறது. மக்களின் நடமாட்டத்திற்கு ஆயுதப்படை இடையூறாக இல்லை.

பாதுகாப்பு கருதியே அவர்கள் விசாரிக்கிறார்கள். நடமாட்டம் என்பது தேவையானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டிய நேரமிது.

கொரோனா 19 தொற்று யாரிடமும் இருந்து பற்றிக் கொள்ளகூடாது. அதற்காகத்தான் சாலைத் தடுப்பு போட்டு மழையிலும் வெயிலிலும் சிரமப்படுகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது இது தெரியாது.

அவர்கள் கடுமையாக இருப்பது போலவே தெரியும். அதைத்தவாறாக எடுத்துக்கொண்டு ஒத்துழையாமை செய்துவிடக்கூடாது.

நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படுமானால் அதன் சிரமங்கள் என்னவாக இருக்கும்?

சிரமங்கள் ஏற்படுமானால் அதன் பாதிப்பும் அதிகமாகிவிடும். இதற்கெல்லாம் காரணம் மக்களாகத்தான் இருப்பார்கள்.

இவற்றையெல்லாம் சரி செய்துவிடமுடியாவிட்டாலும் அதிகரிக்கச் செய்யாமல் பார்த்துக்கொள்ள முடியும். கொஞ்சம் தியாகம் செய்யவேண்டும் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.

யாரையேனும் பார்க்க நேர்ந்தால் பேசுவதைக் குறைத்துக்கொள்ளலாம்.
சைகை மட்டும் போதும்.

ஒருமீட்டர் இடைவெளி கண்டிப்பாய் இருக்க வேண்டும். உணவையும் தேர்ந்து உண்ணவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here