கோலாலம்பூர். மார்ச் 25-
நெருக்கடியான சூழலில்,மக்களின் நலன் கருதி புதிய பொருளாதார திட்டத்தை அரசாங்கம் வெள்ளிக்கிழமை அறிவிக்கும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.
இவ்வறிப்பைச் செய்வதற்காக அரசு அதிகாரிகள் கடுமையாக உழைத்திருக்கின்றனர்.
மக்கள் என்ன தொழிலில் இருக்கின்றனர் என்பதற்கும் அப்பால் பொதுமைத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது.
மக்கள் பல வகையில் உதவிகளை எதிர்ப்பார்க்கின்றனர். டாக்சி ஓட்டுநர்கள், கிராப் ஒட்டுநர்கள், விவசாயி. உணவக நடத்துநர், நாசி லெமா விற்பனையாளர், பர்கர் விற்பனையாளர் தினசரி ஊதியம் பெறுகின்றவர்கள் அனைருக்கும் ஏதுவான திட்டமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் அவர்.
இறையருளால் இது சாதியமாகலாம் என்று சமூக ஊடகச் செய்தியில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
என் தோள்மீது ஏற்றப்பட்டிருக்கும் பொறுப்பில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்குச் சரியானவற்றைக் காட்டவேண்டும். அதனால் சிறந்ததைச் செய்யும் கடமை எனக்கு இருக்கிறது.
இறைவனின் ஆசீர்வாதத்துடன் இப்பொறுப்பைச் சமாளிக்க முடியும் என்றார் அவர்.