கடனைச்செலுத்த கழுத்தை இறுக்காதீர்!

மலேசியா வங்கிகள்

கோலாலம்பூர், மாரச் 26-

தனிபர், வணிகம், கார் கடன், வீட்டுக்கடன் என்றெல்லாம் கடன்பட்டிருப்பார்கள். கடன் இல்லாமல் எதையும் வாங்கமுடியாது. இதை அனுசரித்துதான் வங்கிகள் கடன்வசதியை தாராளாமாக அளிக்கின்றன.

மக்களும் கடன் வசதியிருப்பதால்தான் வீடு, கார், வணிகம் என கடன்பட்டுவிடுகின்றனர். கடன்களைத் தவணைமுறையில் கட்டுவதுதான் விதிமுறையாகக் கையாளப்படுகிறது. இக்கடன் வாரம், மாதம் என்ற அடிப்படையில் செலுத்தப்படுகிறது.

பல ஆண்டுகள்வரை மாதாந்திரத் தவணையில் கடனைக் கட்ட வேண்டியிருக்கும். இதற்கான வட்டியைக் கணக்கிட்டால் குடியே மூழ்கிவிடும், ஆனாலும் வட்டியுடன் கட்டப்படும் தொகை வட்டி வசூலிப்பாகவே கழிக்கப்படுகின்றன. வட்டித்தொகை தீர்ந்தபின்தான் அங்ச பக்கம் வருவார்கள்.

கொரோனா 19 தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் வேலை, வருமானம் இல்லாமல் போகும் அபாயத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மக்களின் கடனை வசுலிப்பது என்பது இயலாத காரியம். கடன் கட்டும் நிலையிலும் மக்கள் நிலைமை இல்லை.

எவ்வித கட்டுப்பாடுமின்றி 6 மாதங்கள் கடன் வசூலிப்பை ஒத்திப்போடுவதுதான் சரியான முறையாக இருக்கும்.இதற்கு அரசாங்கமும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

மக்கள் நிலைமை தடுமாற்றம் நிறைந்ததாக இருக்கிறது. வேலை இழப்பில் இருக்கின்றவர்கள் கடனைச்செலுத்தவே முடியாது.

ஆதலால், எவ்வித நிபந்தனையுமின்றி ஆறு மாதங்கள் வரை கடன் செலுத்துவதை ஒத்திப்போடவேண்டும் என்ற கோரிக்கையை சமுதாய அமைப்புகள் அழுத்தமாக முன்வைத்திருக்கின்றன.

இது மக்களின் சிரமம் மட்டுமல்ல. நாட்டின் சிரமம் எனக் கருதி, வங்கிகள் முன் வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. வங்கிகளும் கொரோனா 19 பாதிப்பை உணர்ந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here