கோலாலம்பூர், மாரச் 26-
கொரோனா 19 என்ற அரக்கனின் கைகளில் மக்கள் அரண்டுக் கிடக்கின்றனர். விட்டில் முடங்கிக்கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் மக்களுக்குக் கைப்பேசிகள் மட்டுமே கருணையோடு உதவுகின்றன என்றால் மறுக்கவா முடியும்?
இருந்தாலும் ஒரு செய்தியை கைப்பேசி நிறுவனங்களின் காதில் போட்டுவைக்க வேண்டும் என்று மனம் அடித்துகொள்கிறது.
வருமானம் இல்லை. வேறுவழியும் இருப்பதாகத்தெரியவில்லை. எத்தனை காலம் இந்தத்துயர் நீளும் என்பதையும் கணிக்க முடியவில்லை. மார்ச் 31 வரை என்பதைத் தொடுமுன் கைக்கெட்டாமல் நகர்ந்து ஏப்ரல் 14 ஆகிவிட்டது.
அரசாங்கம் மிகுந்த அக்கறையோடு பல நகர்வுகளை அறிவித்தும் செய்தும் வருகிறது. மக்களின் ஆலோசனைகளைக் கேட்டும் வருகிறது.
மக்களை மக்களோடு இணைக்கும் ஒரே வழி கைப்பேசிகள் மட்டுமே என்றால் அதுமிகையில்லை. ஆனாலும் ஒரு குறை இருக்கிறது.
மாதாந்திரத் தவணையில் பயன்படுத்தப்படும் கைப்பேசி கட்டணங்களில் சிறப்புகழிவுகள் வழங்கினால் பயனாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக மூன்று மாதங்கள் வரை கட்டண விளைக்களிக்கலாமே!