கோலாலம்பூர், மாரச் 26-
நீண்ட விடுமுறையல்ல. மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இக்காலக் கட்டத்தில் சொந்த ஊருக்குபோகவேண்டாம் என்பது சரியான முடிவா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
சொந்த ஊருக்குப் போவது பாதுகாப்பு என்று பலர் கருதுகின்றனர். வேலை நிமித்தமே பல்லாயிரம் பேர் இடம் மாற்றத்திற்குள் இருக்கின்றனர். இவர்கள் ஏப்ரல் 14 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டில் இருப்பதைவிட, சொந்த ஊர்களுக்குத் திரும்புவது பாதுகாப்பானது என்று கருதுவதில் தவறு இல்லை.
சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றவர்கள் கொரொனா தொற்று இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்துகொண்டு சொந்த ஊருக்குப் போகலாம் என்பதை அனுமதிக்க வேண்டும்.
அப்படியே சொந்த ஊருக்குச் செல்கின்றவர்கள் தங்கள் வளர்ப்புப் பிராணிகள் செல்லப்பிராணிகள் நிலைமை என்ன என்றும் கவனத்தில் கொள்ள வேண்டும்
செல்லப் பிராணிகளின் பாதுகாப்பு குறித்த பொறுப்பை அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும். சட்டத்தின் பிரிவு 24-இன் கீழ் உரிமையாளர்களுக்கு சில பொறுப்புகள் இருக்கின்றன என்பதற்கேற்ப மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்கவேண்டும்.
சுகாதாரம், பாதுகாப்பு, அத்தியாவசியத் தேவைகளுக்கான ஏற்பாடு அனைத்தும் முறையாகச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வறு செய்யத் தவறுகின்றவகளுக்கு விலங்கியல் சட்டப்படி 75 ஆயிரம் வெள்ளிவரை அபராதம், அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று வழக்கறிஞர் சபேதா முகமது நோர் கூறினார்.