கோலாலம்பூர், மாரச் 26-
நாட்டின் நடப்புகளுக்குக் கட்டுப்பாடு இருந்த போதும் சிலவற்றை கட்டிப்போடுவதற்கில்லை. அல்லது இயலாது என்ற வரிசையில், ரப்பர் உற்பத்தி தொடரப்படவேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
ரப்பர் உற்பத்தியாளர்கள், தோட்டத்தொழில்துறையாளர்கள், சிறு ரப்பர் தோட்டக்காரர்கள் இதனைக் கவனத்தில் கொள்ளுமாறு எம் பி ஐ சி எனும் தோட்டத்தொழில்கள், பொருட்கள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
ரப்பர் தொடர்பான உற்பத்திகள் தொடர்ந்து தடையில்லாமல் நடைபெறுவதற்கும் அனைவரின் நலனுக்காகவும் ரப்பர் தொழில் உற்பத்திக்குத் தடையில்லை.
இத்தகு உற்பத்திகள் மூடப்படுமானால் நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சகம் கடுமையான முடிவெடுக்கும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் ஏப்ரல் 14 வரை அல்லது அமைச்சின் மேலதிக அறிவிப்பு வரை இது நடப்பில் இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
எல்ஜிஎம் என்ற ரப்பர் உற்பத்தியாளர்கள் செயல்படவில்லை என்ற புகார்கள் பெறப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக எம்பிஐசி தெரிவித்தது.