ஆன்லைன் ஏமாற்று அம்பலம்

ஆன்லைன் ஏமாற்று அம்பலம்

கோலாலம்பூர், மார்ச் 27-

தனி நபர்கள் இருவர் ஆன்லைன் விற்பனை மோசடியில் ஈடுபட்டது அறியப்பட்திருப்பதை பகாங் போலீசார் உறுதிப்படுத்தினர்.

பகாங் மாநிலத்தின் வர்த்தகக்குற்றப் புலனாய்வுத்துறைத்தலைவர் முகமட் வஜீர் முகமட் தெரிவித்துள்ளார்.

முதல் பதிவில் சம்பந்தப்பட்ட நபர் 29 வயதான மெக்கானிக் மார்ச் 18,19 ஆகிய தேதிகளில் நூறு பாட்டில்கள் கைகழுவும் திரவம், 80 பெட்டிகள் முகக்கவசங்கள் பெறவேண்டி 3,348 ஆயிரம் வெள்ளி செலுத்தியிருக்கிறார்.

இரண்டாவது நபரான பெண்மணி ஒருவர் மார்ச் 23 ஆம்நாள் 83 பெட்டிகள் முகக்கவசங்களுக்காக 1,976 வெள்ளியைச் செலுத்தியிருக்கிறார்.

இவ்விருவரும் குறிப்பிட்ட காலத்தில் பொருட்களைப் பெறவில்லை. விற்பனையாளரைத் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை என்று கூறினர்.

இக்குற்றம் உறுதி செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் சவுக்கடியும் வழங்கப்பட வகைசெய்யும் என முகமட் வஜீர் தெிவித்தார்.

ஆன்லைன் விற்பனையில் கொள்முதல் செய்வதில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா 19 நோய் தொற்று காலத்தில் பல ஏமாற்று வேலைகளைச் செய்வர் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here