ஜோகூர் பாரு:
சுல்தான் இப்ராஹிம் ஜோகூர் அறக்கட்டளை (SIJF)) மூலம் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹம் சுல்தான் இஸ்கந்தர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படவிருக்கிறது.
சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிடப்பட்ட அறிக்கையில், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு 19 வென்டிலேட்டர் கருவிகள் கிடைக்கும் என்றும், மருத்துவமனை குவாங்கிற்கு 24 வென்டிலேட்டர் கருவிகளுடன் 200 தலையணைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் கிடைக்கும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
மேலும், தம்பாயில் உள்ள மருத்துவமனை பெர்மாய்க்கு சுமார் 60 தலையணைகள் மற்றும் பெட்ஷீட்கள் வழங்கப்படும்.
மருத்துவ ஊழியர்களுக்கும், தனிமைப்படுத்தும் அறைகளுக்கும் பாதுகாப்பு கருவிகளை வழங்கி வருகிறது. உபகரணங்கள் மற்றும் பொருட்கள் பல நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.
இந்த தொற்றுநோயை எதிர்த்து ஜோகூரில் உள்ள எங்கள் மருத்துவமனைகளுக்கு உதவ எனது தாராளமான நன்கொடையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.
“இந்த கவலைக்குரிய நிலைமை, பயங்கரமான கோவிட் -19 வைரஸ் பரவுவதற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் தங்கள் பங்கினை அளிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளுக்கு அவர்கள் பெறக்கூடிய அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று அவரது மாட்சிமை கூறினார்.