கோலாலம்பூர், மார்ச் 27-
ஸ்ரீபெட்டாலிங் வட்டாரத்தில் நிகழ்த்தப்பட்ட தப்லிக் ஜமா சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 ஆயிரம் பேரில் 12 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டு விட்டனர்.
மேலும் 4 ஆயிரம் பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.
ஸ்ரீ பெட்டாலிங் பள்ளி வாசலில் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற சமய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது.
இன்னுமும் வெளியே வந்து காவல் நிலையத்திலோ மருத்துவமனைகளிலோ சரணாகதி அடைய வேண்டிய சுமார் 4 ஆயிரம் பேர் ஆபத்த்தானவர்கள் பட்டியலில் இருக்கிறார்கள்.
நல்ல நோக்கத்திற்காக நடத்தப்பட்ட சமய நிகழ்ச்சி என்றாலும், கலந்து கொண்டவர்கள் வைரஸ் சும்ந்தவர்களாக இருப்பதால் இவர்களை முழுவதுமாக அடையாளம் காண வேண்டிய இக்கட்டான சூழல் அரசாங்கத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
தனி மனித தாக்கம் என்ற வரையில் மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் 15ஆம் தேதி முடிய கொரோனா இவர்களை முழுமையாக ஆட்கொண்டு மரணம் வரையில் கொண்டு செல்லலாம்.
வைரஸ் சுமந்தவர்கள் பொது மக்கள் மத்தியில் உலவத் தொடங்கினால் கொரோனா முடிவுப் பாதைக்கு வராமால், மேலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்த 4 ஆயிரம் பேரும் பொது நலன் கருதி உடனடியாக வெளியே வந்து சரணாகதி அடையலாம்.
இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தப்லிக் ஜமாவை சில பாதுகாப்பு காரணங்களை முன் வைத்து மலேசிய அரசாங்கம் தடை செய்யலாம்