பாடாங் பெசார், மார்ச் 27-
மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் இருக்கும் இத்தருணத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் வணிகத்தில் மீறல் செய்யப்பட்டதாக முதலாளியும் அக்கடையின் வாடிக்கையாளரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இவ்விருவரும் அமலில் இருக்கும் சட்டத்தைப் பின்பற்றத் தவறியிருக்கின்றனர். 64, மற்றும் 45 வயதுடைய இவ்விருவரும் தடுத்து வைக்கப் பட்டதை பாடாங் பெசார் மாவட்டக் காவல்துறை தலைவர் ஹலீம் யாத்தீம் தெரிவித்தார்.
அனுமதிக்கப்பட்ட இயக்க நேரமான இரவு 10 மணிக்குப் பிறகும் வணிகத்தில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இருவரிடம் விசாரித்தபோது பொருத்தமில்லாத தகவல்களை வழங்கியதாக போலீசார் கூறினர். இவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.