கொடுப்பதற்கு மனமிருந்தால் தடுப்பதற்குத் தகுதியில்லை

சிபு, மார்ச் 27-

கொரோனா 19 இருப்பதைக் கண்டுபிடிக்கும் கருவியின் பயன்பாடு மிக முக்கியமானது என்பதை உணர்ந்த ஒருவர், ஒரு லட்சத்து 48 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள கொரோனா 19 ஐ கண்டுபிடிக்கும் இயந்திரமொன்றை வழங்கியிருக்கிறார்.

உதவி செய்யவேண்டும் என்பதே முக்கியம். தன்னை அடையாளப் படுத்திக்கொள்வது முக்கியமல்ல என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட இவரை யாரென்று அறிய முடியவில்லை.

பிசிஆர் என்ற சுருக்கபெயரைக்கொண்ட இந்த இயந்திரத்தின் அவசியம் இன்றியமையாதது. இதனால், கொரோனா 19 நோயை அறிந்து உதவமுடியும்.

கல்வி, அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவி அமைச்சர் டாக்டர் அனுவார் ராபாய் மூலம் இந்த இயந்திரம் மருத்துமனைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரத்தோடு இரண்டு இயந்திரங்கள் இப்போது இருப்பதாக இயக்குநர் டாடர் முஹமட் என் ஜி சியா ஹுவாட் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here