தமிழகத்தில் C 19 எண்ணிக்கை 40 ஆக உயர்வு

சென்னை, மார்ச் 28-

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு  கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று நிலவரப்படி, 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர்.

இந்த நிலையில், மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூரைச் சேர்ந்த 49 வயதான நபர் ஒருவருக்கும் கும்பகோணத்தை சேர்ந்த 42-வயது நபர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வேலூரை சேர்ந்த நபர், சமீபத்தில் இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தார் எனவும்  கும்பகோணத்தை சேர்ந்தவர் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று வந்திருந்தார் எனவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here