நடமாட்டக் கட்டுப்பாடு உடற்பயிற்சிக்காக அல்ல

உடற்பயிற்சிக்காக அல்ல

கோலாலம்பூர், மார்ச் 28-

நடமாட்டக் கட்டுப்பாட்டை இன்னும் சிலர் விளையாட்டாகவே எடுத்துக்கொலள்கின்றனர் என்று கோலாலம்புர் காவல்துறைத்தலைவர் டத்தோ ஶ்ரீ மஸ்லான் லாஸிம் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டை மீறி பயிற்சியில் ஈடுபட்டிருந்த 11 பேரை கைது செய்திருக்கின்றனர். இவர்கலில் இருவர் மலேசியர்கள்.

நான்கு ஜப்பானியர்கள்,இருவர் தென் கொரியர்கள், ஒருவர் இந்தியர் , ஒருவர் அமெரிக்கர், ஒருவர் பிரிட்டிஸ் காரர் என்று அவர் தெரிவித்தார்.

இவர்களைத்தடுத்து விசாரித்ததில் முரணான செய்திகளை வழங்கினர். எச்சரிக்கை ஆலோசனைகளுக்கும் செவி சாய்க்கவில்லை.

இவர்கள் சட்டம் 122 இன் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர். விசாரணைக்குப்பின் இவர்கள் போலீஸ் நிபந்தனையில் விடப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here