அரசு உதவிக்கு இன்னும் பதியவில்லையா?

அரசு உதவிக்கு இன்னும் பதியவில்லையா?

கோலாலம்பூர், மார்ச்  30-

அரசாங்கம்  வழங்க முன்வந்திருக்கும்  உதவித் தொகைகளுக்கு தங்கள்  பதிவை உறுதி  செய்துகொள்ளுமாறு நிதியமைச்சு கூறியிருக்கிறது.

இதற்கு முன், வாழ்க்கைக்க  உதவித்தொகை பெறுவந்தவர்கள்  பதிந்துகொள்ள வேண்டியதில்லை. இதுவரை அந்நிதிக்கு விண்ணப்பிக்காதவர்கள்  விண்ணப்பம் செய்து கொள்ளும்படி ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது.

புதிதாக அறிவிக்கப்பட்ட நிதியுதவிக்கு ஒருகோடி ஒதுக்கப்படிருக்கிறது என்றும்  நிதியமைச்சு தெரிவித்திருக்கிறது. இம்மாத இறுதியிலும் மேமாதத்திலும்  இந்நிதி வழங்கப்படுமென  எதிர்ப்பார்க்கப்படுகிறது.

புதியவர்கள்  ஏப்ரல் மாத  முதல்  நாளிலிருந்து வரிமான வரித்துறை அகக்பக்கத்தில் www.hasil.gov.my  என்ற முகவரியில்   விண்ணப்பிக்கலாம். அல்லது அலுவலக எண்கள்  03-8882 9089, 9087/9191/4565 ஆகியவற்ரில்  தொடர்புகொள்ளலாம்.

இதன்  தொடர்பில்  முகம்  தெரியாத மூன்றாம் தரப்பினர்  உதவியை நாடி ஏமாந்துவிடவேண்டாட்ம்  என்றும்  கேட்டுக்கொள்ளப்படிருக்கின்றனர்.

கள்ளப் பேர்வழிகளிடம் விவரங்களைக் கொடுத்து ஏமாந்துவிட வேண்டாம் என்றும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here